Sunday, August 23, 2009

பாவ மன்னிப்பு - எல்லோரும் கொண்டாடுவோம் / paava mannippu- ellorum kondaaduvom

படத்தின் பெயர் : பாவ மன்னிப்பு
பாடல் துவக்கம்: எல்லோரும் கொண்டாடுவோம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: T.M. சௌந்தராஜன்
இசை அமைத்தவர்: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
படம் திரையிடப்பட்ட வருடம்: 1961
மொழி: தமிழ்
நாடு: இந்தியா
நடிகர்: சிவாஜி கணேசன்


பாடல் வரிகள் தமிழில்:

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

கல்லாகப் படுத்திருந்து
கழித்தவர் யாருமில்லை
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பது லாபமில்லை
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அதனையும்
ஆண்டவனின் பிள்ளையடா..ஆ..
கறுப்பில்ல, வெளுப்பில்ல
கடவுளுக்கு உருவமில்ல
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம்
முடிவுக்கு தந்தை என்போம்
மண்ணிலே விண்ணை கண்டு
ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமே
ஆடி முடிக்கையில் அள்ளி சென்றோர் யாருமுண்டோ..


படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்..

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

-------------------------------------------------

MOVIE NAME: PAAVA MANNIPPU
SONG TITLE : ELLORUM KONDAADUVOM
LYRICS: KANNADHAASAN
SINGERS: T.M.SOUNDARAJAN
MUSIC DIRECTOR: VISHWANATHAN-RAMAMOORTHY
YEAR OF RELEASE: 1961
LANGUAGE : TAMIL
COUNTRY OF ORIGIN: INDIA
LEAD ROLE BY: SHIVAJI GANESAN

lyrics in english:

Ellorum kondaduvom
ellorum kondaduvom
allaavin perai cholli
nallorgal vaazhvai enni
ellorum kondaduvom
ellorum kondaduvom

kallaaga paduthirundhu
kalithavar yaarumilla
kai kaalagal oindha pinne
thudippadhu laabamilla
vandhadhai varavil vaippom
seyvadhai selavil vaippom
indru pol endrum inge ondrai kooduvom

ellorum kondaduvom
ellorum kondaduvom

nooru vagai paravai varum
kodi vagai poo malarum
aada varum aththanaiyum aandavanin pillaiyadaa.. aaa...
karupilla veluppumilla
kadavulukku uruvamilla
kadalukkul pirivumillai
kadavulil bethamillai
mudhalukku annaiyenbom
mudivukku thandhaiyenbom
mannile vinnai kandu ondraai kooduvom

ellorum kondaduvom
ellorum kondaduvom

aadaiyindri pirandhomey..
aasaiyindri pirandhomaaa...
aadi mudikkaiyil alli chendror yaarumundo.. oo..

padaithavan serthu thandhaan
madhathavan pirithu vaithaan
eduthavan maraithu kondaan
koduthavan theruvil nindraan
eduthavan kodukka vaippom
koduthavan edukka vaippom
indru pol endrum inge ondraai kooduvom
ellorum kondaduvom
ellorum kondaduvom